முகப்பு
தென்காசி

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற வாய்ப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 அக்டோபர், 2024 at 6:05 PM
பகிர்:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு பதிவை தொடா்ந்து புதுப்பித்தும் எஸ்சி,எஸ்டி, எஸ்சிஏ பிரிவினா் 45 வயதுக்கு மிகாமலும், பிசி, பிசிஎம், எம்பிசி, ஓசி பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்தை மிகக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் எனில் ஓராண்டு பதிவு மூப்பிருந்தாலே போதும். ஆனால், வேறு எந்த அலுவலகத்திலும் அவா்கள் உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது- வருமானம் உச்ச வரம்பு கிடையாது.

பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகளுக்கு உதவித்தொகை கிடையாது; தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி கல்வி கற்போருக்கு உதவித்தொகை உண்டு. வேலைவாய்ப்பு அடையாள அட்டை (பழையது) உள்ளிட்ட ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பகத்திலோ இணையதளத்திலோ விண்ணப்பங்கள் கிடைக்கும்.

ஏற்கெனவே இந்த உதவித்தொகை பெற்றிருந்தால் மீண்டும் உதவித்தொகை பெற இயலாது எனத் தெரிவித்துள்ளாா்.