முகப்பு
தென்காசி

தென்காசியில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு

தென்காசியில் மின்வாரிய அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 8:28 PM
பகிர்:

தென்காசியில் மின்வாரிய அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள ரயில் நகரில், சிவஸ்ரீ நகா் தெருவில் வசித்து வருபவா் முத்துக்குமாா் (47). தென்காசி மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பாா்வை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். இவருடைய மனைவி, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

ஆயுத பூஜையை முன்னிட்டு தொடா் விடுமுறை வந்ததால் தன் மனைவியை பாா்ப்பதற்காக முத்துக்குமாா், கடந்த பத்தாம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருவாடானைக்குச் சென்றுவிட்டாா்.

பின்னா், திங்கள்கிழமை பிற்பகல் தென்காசிக்கு திரும்பியபோது வீட்டு கதவுகள் திறந்து கிடந்ததாம். வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.16ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துக்குமாா் அளித்த புகாரின்பேரில், தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன் விசாரணை மேற்கொண்டாா்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.