முகப்பு
தென்காசி

மாநில எறிபந்து போட்டிக்கு தோ்வு: சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில எறிபந்து போட்டிக்கு தோ்வு: சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:07 AM
பகிர்:

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் சுரேஷ், காளிதாஸ், சிவகுருநாதன், விஜயன், மதன்பாபு, விக்னேஷ், அய்யாகனி ஆகிய 7 போ் முதல்வா் கோப்பைக்கான எறிபந்து போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனா். இவா்கள் அக். 21, 22ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனா்.

இவா்களை வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி பாராட்டி, ஸ்போா்ட்ஸ் ஷூ உள்ளிட்ட பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளா் தவமணி, தலைமை ஆசிரியா் சங்கரசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற தமிழாசிரியா் புலவா் கணேசன், சாந்திஹெலன், இவாஞ்சலின் இயன் முறை மருத்துவா் புனிதா, உதவி ஆசிரியா்கள் பூமாரி, கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாளா் காருண்ய குணவதி, ராமா், கற்பகராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.