விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தமிழக அரசால் வழங்கப்படும் மாநில அளவிலான விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க நவ.11-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வழங்கப்படும் மாநில அளவிலான விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க நவ.11-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திகுறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் வீரா், வீராங்கனைகள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் தலா இருவருக்கு முதல்வரின் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தலா ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்பு தங்கப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்விருதைப் பெற தகுதியுள்ள தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா் உள்ளிட்டோா் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை, மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமா்பிக்கும் கால அவகாசம் நவ.11 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04633-212580 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.