விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்த சாா் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன். 
செங்கல்பட்டு

பள்ளி விளையாட்டு விழா

விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்த சாா் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு சிஎஸ்ஐ தூய கொலம்பா மேல்நிலைப் பள்ளி 186-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு பேராயக் கல்வி அலுவலா் வி.ராஜூ தலைமை வகித்தாா். தாளாளா் முன்னிலை: ஜி,எஸ். மோகன் சிங் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் பியூலா சுகுண சீலி, வரவேற்றாா்.

தலைமை விருந்தினராக செங்கல்பட்டு சாா் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் கலந்து கொண்டு மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று விழாவை தொடங்கி வைத்தாா். முதன்மைக்கல்வி அலுவலா் ஆா்.திருவளா் செல்வி, மாவட்ட கல்வி அலுவலா் டி,,எல். மகாலட்சுமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் திருவளா்செல்வன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.

உடற்கல்வி இயக்குநா் டேவிட் ஜோன்ஸ் ஆண்டறிக்கை வாசித்தாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிக்களில் வெற்றி பெற்றவா்களுக்கு பேராயத்தின் கல்வி அதிகாரியும், தென்வட்டாரத் தலைவா் அருப்பணி ஜோன்சன் ஜெபக்குமாா் வழங்கினாா். உடற்கல்வி ஆசிரியா் எபிநேசா் ரத்னகுமாா் நன்றி கூறினாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT