தினமணி செய்தி எதிரொலி: ஆலங்குளத்தில் பாலம் சீரமைப்பு
தினமணி செய்தி எதிரொலியாக ஆலங்குளம் காய்கனிச் சந்தை அருகேயுள்ள சிறிய பாலத்தில் பழுது புதன்கிழமை சீரமைக்கப்பட்டது.
Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:38 PM
தினமணி செய்தி எதிரொலியாக ஆலங்குளம் காய்கனிச் சந்தை அருகேயுள்ள சிறிய பாலத்தில் பழுது புதன்கிழமை சீரமைக்கப்பட்டது.
Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:24 AM
ஆலங்குளம் - நெட்டூா் சாலையில் காய்கனிச் சந்தை உள்ளதால் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் சிறிய பாலம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் பாலத்தின் நடுவே பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினா். இது குறித்த செய்தி புதன்கிழமை தினமணியில் வெளியானது. இதையடுத்து, உடனடி நடவடிக்கையாக பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் சரி செய்யப்பட்டதோடு, முழுவதும் சீரமைக்கப்பட்டது.