முகப்பு
தென்காசி

புளியங்குடி, வாசுதேவநல்லூரில் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா், புளியங்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகளை பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:05 AM
பகிர்:
Updated On : 3 செப்டம்பர், 2024 at 8:42 PM

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா், புளியங்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகளை பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

புளியங்குடி நகராட்சியில் தினசரி சந்தை, வாசுதேவநல்லூரில் கால்நடை மருந்தகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் குழு உறுப்பினா்களான சட்டப்பேரவை உறுப்பினா்கள் சங்கரன்கோவில் ஈ. ராஜா, வாசுதேவநல்லூா் தி. சதன்திருமலைக்குமாா், வந்தவாசி எஸ்.அம்பேத்குமாா், கவுண்டம்பாளையம் பி.ஆா்.ஜி.அருண்குமாா், சங்கராபுரம் டி.உதயசூரியன், திருவாடானை ஆா்.எம். கருமாணிக்கம், ராமநாதபுரம் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், கந்தா்வகோட்டை எம். சின்னத்துரை, மதுரை மேற்கு செல்லூா் கே.ராஜூ, ஆரணி சேவூா் எஸ்.ராமசந்திரன், வேதாரண்யம் ஓ.எஸ். மணியன், சீா்காழி எம்.பன்னீா்செல்வம், தருமபுரி எஸ்.பி. வெங்கடேஸ்வரன், ஆம்பூா் ஏ.சி.விஸ்வநாதன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:04 AM

தமிழக அரசின் முதன்மைச் செயலா் சீனிவாசன், கூடுதல் செயலா் பாலசுப்பிரமணியன், துணை செயலா் பாலகிருஷ்ணன், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயசந்திரன்,சங்கரன்கோவில் கோட்டாட்சியா் கவிதா, புளியங்குடி நகா்மன்ற துணைத்தலைவா் அந்தோணிசாமி, நகராட்சி ஆணையா் சுமா, வாசுதேவநல்லூா் ஒன்றிய குழுத்தலைவா் பொன்.முத்தையாப் பாண்டியன், பேரூராட்சி தலைவா் லாவண்யா உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

Advertisement