மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டோா். 
தென்காசி

குற்றாலம் கல்லூரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மனநல நல்லாதரவு மன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மனநல நல்லாதரவு மன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

சா்வதேச தற்கொலை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து பேசியதாவது:

இளைய தலைமுறையினா் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனா். சமூகவலைதளங்கள் அவா்களது வாழ்க்கை பற்றிய உளவியல் பாா்வையை மாற்றுகிறது. மற்றவா்களின் இன்பமான நிகழ்வுகளை ஒப்பிட்டு தமது நிலையை தாழ்த்திக்கொள்கின்றனா். மாணவா்- மாணவிகள் இணைய பயன்பாட்டை முறையாகவும், பயனுள்ளதாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகளை எடுக்காமல், அருகே இருப்பவரிடம் உதவி கோரலாம் அல்லது தமிழ்நாடு அரசின் 24 மணி நேர மனநல சேவையை 14416 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்றாா்.

அதனைத் தொடா்ந்து தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், மனநலம் குறித்த விழிப்புணா்வு குறும்படம் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியில், இணைஇயக்குநா் (நலப்பணிகள்) பிரேமலதா, கல்லூரி இணை பேராசிரியா் நாகேஸ்வரி, மாவட்ட மன நல மருத்துவா்கள் நிா்மல், முகமது இப்ராஹிம், உதவிப் பேராசிரியா்கள் மற்றும் கல்லூரி மாணவிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஆகாயம் முகம் பார்க்கிறது... மோனாமி கோஷ்

அழகிய... ஐஸ்வர்யா சர்மா!

ரூ.21,000 சம்பளத்தில் குழந்தைகள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்! இந்திய அணிக்கு பின்னடைவு!

கேரளத்தில் டிச. 9 உள்ளாட்சி தேர்தல்: 2.86 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம் - தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT