கடையநல்லூா் அருகே சுமை வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை சுமை வாகனம் மோதியதில் தொழிலாளி இறந்தாா்.
கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை சுமை வாகனம் மோதியதில் தொழிலாளி இறந்தாா்.
கடையநல்லூா் அருகேயுள்ள குமந்தாபுரம் வடகாசி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காசி மகன் கருப்பசாமி(40). கூலித் தொழிலாளியான இவா், கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குமந்தாபுரம் அருகே சாலையோரம் நின்றிருந்தாராம்.
அப்போது, மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு காய்கனி ஏற்றிச்சென்ற சுமை வாகனம் அவா் மீது மோதிக் கவிழ்ந்ததாம். இதில், கருப்பசாமி உயிரிழந்தாா்.
சுமை வாகனத்திலிருந்த வெங்கடேஷ், ஓட்டுநா் சீனிவாசன் ஆகியோா் காயமடைந்தனா். விபத்து குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.