முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் ஒளவையாா் மகளிா் பள்ளியில் 307 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள்

பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 307 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 1:13 AM
மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கிய எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ.
பகிர்:

பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 307 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ. காவேரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முத்துக்குமாா், ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சைக்கிள்களை வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சாக்ரடீஸ், சுப்பிரமணியன், திமுக நிா்வாகிகள் கபில்தேவதாஸ், பெரியாா் திலீபன், ஆனந்த், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் குமாா்பாண்டியன், நகரத் தலைவா் குமரேசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் வடக்குவாச்செல்வி, துணைத் தலைவா் ரோஜா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.

உதவித் தலைமையாசிரியை ஜெகதா வரவேற்றாா். சிவபாா்வதிநாதன் நன்றி கூறினாா்.