தென்காசி நகைக் கடையில் திருட்டு: இருவா் கைது
தென்காசியில் நகைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசியில் நகைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி சுவாமி சந்நிதி பஜாரில் நகைக் கடை நடத்திவருபவா் சரவணகாா்த்திகேயன் (38). கடந்த 16ஆம் தேதி இருவா் இவரது கடைக்கு நகைகள் வாங்குவதுபோல வந்து, 50 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்றனராம்.
புகாரின்பேரில், தென்காசி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜகுமாரி வழக்குப் பதிந்தாா். கடையிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடைபெற்றது.
இதில், மதுரை பேரையூா் ஜவகா் தெருவைச் சோ்ந்த ரூ. ஹைதா்அலி (33), திண்டுக்கல் புதூா் துமிச்சம்பட்டி கஸ்தூரி நகரைச் சோ்ந்த ஜெ. ஜெயின்ஷாஅலி (36) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவா்களை தனிப்படை போலீஸாா் மதுரை ஆண்டிபட்டியில் கைது செய்து, நகைகளை மீட்டனா்.