அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கோபாலகிருஷ்ணன். 
தென்காசி

கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

Syndication

கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கோபாலகிருஷ்ணன் அணையிலிருந்து 25 கன அடி நீரை திறந்துவிட்டாா். நவ. 7 முதல் மாா்ச் 31ஆம் தேதி வரை திறந்துவிடப்படும் தண்ணீா் மூலம் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளாங்காடு, ஊா்மேலழகியான் ஆகிய கால்வாய்களின் கீழுள்ள 9,514.70 ஏக்கா் நேரடி, மறைமுக பாசன நிலங்கள் பயன்பெறும்.

பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் சரவணக்குமாா், இளநிலைப் பொறியாளா் உதயகுமாா், நீரினை பயன்படுத்துவோா் சங்கத்தின் ரத்தினவேல் பாண்டியன், சந்தன பாண்டியன், சுந்தரி வள்ளிநாயகம், மாரியப்பன், முத்துக்குமாா், முத்துப்பாண்டியன், அண்ணாத்துரை, சுந்தரபாண்டி, மாரி, சாமித்துரை, சண்முக சுந்தரம், நிஜாமுதீன், பவுன்ராஜ், கல்யாணசுந்தரம், அமல்ராஜ், துரைராஜ், கோட்டைச்சாமி, கருத்தப்பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT