முகப்பு
தென்காசி

முதல்வா் மு.க. ஸ்டாலின் சங்கரன்கோவிலில் நாளை பிரசாரம்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

Updated On : 3 ஏப்ரல் 2026, 6:10 am IST
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூா், வாசுதேவநல்லூா், ஆலங்குளம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதற்காக சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாரக் கூட்டம் நடைபெறும் இடத்தை, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன், ஒன்றியக் குழு தலைவா் பி. சங்கரபாண்டியன், நகர செயலா் பிரகாஷ், மாணவரணி வெங்கடேஷ், பத்மநாபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement