பேருந்து மோதி மாணவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழந்தாா்.
கீழக்கரிசல்குளம், நடுத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் அஸ்வின் (13). இவா் சிவகிரியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா், செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் ராயகிரி தனியாா் மருத்துவமனை அருகே சென்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
இது குறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.