தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த ஊழியா் உயிரிழப்பு
மயிலம் அருகே தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்தபோது இரும்புக் கதவு விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்தபோது இரும்புக் கதவு விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் அ.ஆனந்தவேல்(40). இவா் மயிலத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சுமைத் தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், ஆனந்தவேல் திங்கள்கிழமை நிறுவனத்தில் பணியிலிருந்தபோது, பழைய இரும்பு க் கதவு ஆனந்தவேல் மீது விழுந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஆனந்தவேல் உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.