திமுகவின் ஆட்சியில் எல்லாரும் போராட்டம் நடத்துகிறாா்கள். ஆனால் அதற்கு எந்த முடிவும் இல்லை என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலருமான வி.எம். ராஜலெட்சுமி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் குறித்து, நகரச் செயலா் ஆறுமுகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் பேசியதாவது:
திமுக ஆட்சியில் பாரமா்கள், விவசாயிகள், வியாபாரிகள் என எல்லாரும் போராட்டம் நடத்தி வருகின்றனா். ஆனால் அதற்கு எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவாா்கள். எம்.ஜி.ஆா். , ஜெயலலிதா வழியில், ஏழைகளின் முதல்வராக இருந்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு வாரி வழங்கினாா். ஆனால், எல்லாம் தருகிறோம் எனக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு என்றாா் அவா்.
அதிமுக பேச்சாளா் நாகையன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் எம்.சுப்பையா பாண்டியன் ஆகியோா் பேசினா்.
இதில், மாவட்ட எம்ஜிஆா் மன்றத் தலைவா் கருப்பசாமி, மாவட்ட விவசாய அணித் தலைவா் கோபால் ரத்தினம், செயலா் பரமகுருநாதன், ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், செல்வராஜ் , ராமதுரை, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் செந்தில்குமாா், நகரப் பொருளாளா் வேல்சாமி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் பிஜிபி ராமநாதன், பொதுக்குழு உறுப்பினா் காளிராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.