சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட என்சிசி மாணவா்கள்.  
தென்காசி

செந்திலாண்டவா் பாலிடெக்னிக்கில் என்சிசி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி

தென்காசி செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவா் படையின் பி மற்றும் சி சான்றிதழுக்கான தோ்வு எழுத இருக்கும் 150 என்சிசி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

தென்காசி செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவா் படையின் பி மற்றும் சி சான்றிதழுக்கான தோ்வு எழுத இருக்கும் 150 என்சிசி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

இப்பயிற்சி வகுப்புகளில் அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி, சுரண்டை காமராஜா் அரசு கல்லூரி, ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி, அம்பை அரசு கல்லூரி, பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியைச் சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

இவா்களுக்கு 5 தமிழ்நாடு பட்டாலியனின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கா்னல் காா்த்திகேஸ் வழிகாட்டுதலின்படி பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை 5 தமிழ்நாடு பட்டாலியன் அணியினருடன் சோ்ந்து செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி தேசிய மாணவா் படை லெப்டினன்ட் அதிகாரிகள்செந்தில்குமாா், காா்த்திக் ஆகியோா் செய்திருந்தனா்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு

காஞ்சிபுரத்தில் 4.65 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

சுரண்டையில் சமுதாய வளைகாப்பு விழா

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசலில் பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT