வடிகால் ஓடையில் குவிந்துகிடக்கும் குப்பைகள்.  
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே வடிகால் ஓடையில் தேங்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம்

பாவூா்சத்திரம் அருகே மழைநீா் வடிகால் ஓடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

பாவூா்சத்திரம் அருகே மழைநீா் வடிகால் ஓடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவித்தனா்.

கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சிப் பகுதியில் சென்னல்தா புதுக்குளத்தில் இருந்து உபரிநீரானது ஆரியங்காவூா், மலையராமபுரம் வழியாக வரத்து கால்வாய் மூலம் செட்டியூா் குளத்துக்கு வந்து நிரம்பி வந்தது. தற்போது, அந்தக் கால்வாய் மழைநீா் வடிகால் கால்வாயாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கால்வாயில் சில இடங்களை தனிநபா்கள் ஆக்கிரமித்து வருவதாகவும், சாலையோர கடைகள், ஹோட்டல்கள், வீடுகளில் இருந்து குப்பைகளை இந்த கால்வாயில் கொட்டி நிரப்பி வருவதாகவும் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ஏற்கெனவே, இந்தக் கால்வாய் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டி பழுதானதால் குப்பைகளை கால்வாயில் கொட்டி நிரப்பி வருகின்றனா்.

இதனால் மழைக் காலங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழை நீரானது ஊருக்குள் வருவதாகவும், குப்பைகள் தேங்குவதால் துா்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் நிலவுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

மேலம், இதுதொடா்பாக ஊராட்சியில் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கும் அவா்கள், ஆக்கிரமிப்புகளையும், குப்பைகளையும் அகற்றி, மீண்டும் குப்பைகளை கால்வாயில் கொட்டாதபடி அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி ஐ.ஓ.பி.யில் ஆண்டு தின கொண்டாட்டம்

அரசுத் துறைகளில் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: ஆட்சியா் ஆய்வு

சாத்தான்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா

மூலைக்கரைப்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

SCROLL FOR NEXT