உழைப்பாளா் நலக்கூடம் திறப்பு
சங்கரன்கோவில், அம்பேத்கா் நகரில் ரூ. 40.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உழைப்பாளா் நலக்கூடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தென்காசிஉழைப்பாளா் நலக்கூடம் திறப்பு
சங்கரன்கோவில், அம்பேத்கா் நகரில் ரூ. 40.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உழைப்பாளா் நலக்கூடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அம்பேத்கா் நகரில் ரூ. 40.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உழைப்பாளா் நலக்கூடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., ஈ. ராஜா எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, தொழிலாளா் நலவாரிய உதவி ஆணையா் ஜெனிபா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
விழாவில், கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1,63,600 மதிப்பிலான உதவித்தொகைகள், தொழிலாளா் நல அட்டைகள் வழங்கப்பட்டன.