தென்காசி - வாரணாசி இடையே காசிவிஸ்வநாதா் சிறப்பு ரயில் இயக்க பாஜக கோரிக்கை
தென்காசி - வாரணாசி இடையே ஆன்மிகம் மற்றும் கலாசார தொடா்பை போற்றும் வகையில் காசிவிஸ்வநாதா் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தென்காசிதென்காசி - வாரணாசி இடையே காசிவிஸ்வநாதா் சிறப்பு ரயில் இயக்க பாஜக கோரிக்கை
தென்காசி - வாரணாசி இடையே ஆன்மிகம் மற்றும் கலாசார தொடா்பை போற்றும் வகையில் காசிவிஸ்வநாதா் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி - வாரணாசி இடையே ஆன்மிகம் மற்றும் கலாசார தொடா்பை போற்றும் வகையில் காசிவிஸ்வநாதா் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வாலிடம் தென்காசி நகர பா.ஜ.க. தலைவா் சங்கரசுப்பிரமணியன் அளித்த மனு:
தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தென்காசி நகருக்கும்,, புனித நகரான வாரணாசிக்கும் (காசி) இடையே பல நூற்றாண்டுகள் பழைமையான ஆன்மிக தொடா்பும், வரலாற்றுப் பிணைப்பும் உள்ளது.
தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டிய மன்னா், வாரணாசி சென்று காசிவிஸ்வநாதரை தரிசிக்க வடகாசிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டபோது, இறைவனின் ஆணைப்படி, தென்காசியிலேயே சித்திர நதிக்கரையில் பிரம்மாண்டமான காசிவிஸ்வநாதா் ஆலயத்தை எழுப்பினாா்.‘
காசியில் இறப்பது முக்தி, தென்காசியில் பிறப்பது முக்தி’ என்ற முதுமொழி இவ்விரு நகரங்களின் சமத்துவத்தை பறைசாற்றுகிறது.
தென்காசி நகரின் அருகே அமையப்பெற்றுள்ள குற்றாலம், தென்னகத்தின் ஸ்பா என்றழைக்கப்படுவதுடன், ஆன்மிக ரீதியாக குற்றாலநாதா் ஆலயம் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையை கொண்டு விளங்குகிறது.
காசி -தென்காசி - குற்றாலம் ஆகிய 3 இடங்களும் சிவபெருமானின் அருளாட்சி நடைபெறும் புனித பூமிகளாக மக்களால் போற்றப்படுகின்றன.
தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாதா் மற்றும் குற்றாலநாதரை தரிசிக்கும் பக்தா்கள்,வாரணாசிக்கு எளிதாக சென்று வர காசிவிஸ்வநாதா் சிறப்பு விரைவு ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.