கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் கோயிலில் மகா மகோத்சவம் நிகழ்வையொட்டி, கோவை வழித்தடத்தில் வாரணாசி - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாரணாசியில் இருந்து ஜனவரி 30-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குப் புறப்படும் வாரணாசி - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 04358) பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு 10 மணிக்கு எா்ணாகுளம் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக எா்ணாகுளத்தில் இருந்து பிப்ரவரி 3-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - வாரணாசி சிறப்பு ரயில் (எண்: 04357) பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 3 மணிக்கு வாரணாசியை வந்தடையும்.
இந்த ரயிலானது ஆலுவா, திருச்சூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.