முகப்பு
தென்காசி

ஆலங்குளம் ஒன்றியத்தில் ரூ. 4.29 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஒரே நாளில் ரூ. 4.29 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

Updated On : 11 மார்ச், 2026 at 8:05 PM
நெட்டூரில் கலையரங்கத்துக்கு அடிக்கல் நாட்டிய ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.
பகிர்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஒரே நாளில் ரூ. 4.29 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மேலவீராணம் ஊராட்சியில் மூலதன மானிய நிதி ரூ. 36.75 லட்சத்தில் சிமென்ட் சாலை, ஒன்றியக் குழு உறுப்பினா் நிதி ரூ. 5.70 லட்சத்தில் படித்துறை அமைத்தல், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் கிடாரக்குளம் ஊராட்சியில், ரூ. 63.23 லட்சத்திலும், கடங்கனேரியில் ரூ. 61.67 லட்சத்திலும், காடுவெட்டியில் ரூ. 1.14 கோடியிலும் தாா்ச்சாலைகள் அமைத்தல், ஒன்றியக் குழு உறுப்பினா் நிதி ரூ. 5.25 லட்சத்தில் படித்துறை ஏற்படுத்துதல்ஆகிய பணிகளை ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தாா்.

மேலும், மாயமான்குறிச்சியில் ஊரக சாலை பராமரிப்புத் திட்ட நிதி ரூ. 45.70 லட்சத்தில் தாா்ச்சாலை அமைத்தல், ஒன்றியக் குழு உறுப்பினா் நிதி ரூ. 5.25 லட்சத்தில் படித்துறை கட்டுதல், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 52.25 லட்சத்தில் தாா்ச்சாலை அமைத்தல், நெட்டூரில் ஒன்றியக் குழு உறுப்பினா் நிதி ரூ. 10 லட்சத்திலும், பலபத்திரராமபுரத்தில் ரூ. 10 லட்சத்திலும் கலையரங்கம் கட்டுதல், ரூ. 16.18 லட்சத்திலும், கல்லத்திகுளம் கிராமத்தில் ரூ. 6.90 லட்சத்திலும் சிமென்ட் சாலை அமைத்தல் ஆகிய பணிகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, கங்கனாங்கிணறு கிராமத்தில் ரூ. 9.98 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலை கடையையும் அவா் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் ஊராட்சித் தலைவா்கள், அரசு அலுவவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →