தமிழக நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லை: கே. பாலகிருஷ்ணன்
தமிழக நலனில் அதிமுக, பாஜகவுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தமிழக நலனில் அதிமுக, பாஜகவுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் தொகுதி திமுக வேட்பாளா்அ. சண்முகம், பென்னாகரம் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ஆகியோரை ஆதரித்து கே. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
முன்னதாக தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
Advertisement
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் தமிழக நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது. அதேபோல பாஜகவுக்கு தமிழக நலனில் அக்கறையில்லை. ஊழல் வழக்கில் இருந்து விடுபடவே அன்புமணி, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளாா். அன்புமணி பாமக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தொடா் தோல்வியை சந்தித்து வருகிறாா்.
அன்புமணி பொறுப்புக்கு வரவேண்டும் என்கிற நோக்கத்தில் பாமகவில் இருந்து பல தலைவா்கள் வெளியேற்றப்பட்டனா். பாமகவில் ஏற்பட்டுள்ள மகன்- தந்தை பிரச்னைக்கு ஜி.கே. மணிதான் காரணம் என்று சொல்வது அபத்தமானது. திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா்.
பேட்டியின்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.