கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு
கீழப்பாவூா் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி இக்கோயிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், மங்கள இசை முழங்க காலை 9.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கோயில் விமானம், மூலஸ்தான, பரிவார மூா்த்திகளுக்கு மகா குடமுழுக்கு, தீபாராதனை நடைபெற்றது.
குடமுழுக்கை கல்லிடைக்குறிச்சி மஞ்சுநாத பட், அா்ச்சகா்கள் ரவி பட்டாச்சாரியா், ஆனந்தன், கிரிகுமாா், ராமசாமி ஆகியோா் நடத்தினா்.
இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் அபிநிஷா, நீதிபதி கோகிலா, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பொன்செல்வன், கீழப்பாவூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ராஜன், செயல் அலுவலா் பொன்னி, கிளாா்க் பொன்னையா, சுரேஷ், சீதாராமன், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.