முகப்பு
தென்காசி

மாா்ச் 30-இல் கடையநல்லூரில் எடப்பாடி பிரசாரம்: எம்எல்ஏ ஆய்வு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 30-இல் பிரசாரம் மேற்கொள்கிறாா். இதையடுத்து பிரசார இடத்தை அதிமுகவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 26 மார்ச், 2026 at 11:45 PM
கடையநல்லூா் பேருந்து நிலையப் பகுதியை பாா்வையிடும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ. உடன் துணைச் செயலா் பொய்கை மாரியப்பன்.
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 30-இல் பிரசாரம் மேற்கொள்கிறாா். இதையடுத்து பிரசார இடத்தை அதிமுகவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட கடையநல்லூா், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 30-ஆம் தேதி கடையநல்லூரில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதையடுத்து, பிரசாரத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட கடையநல்லூா் பேருந்து நிலைய பகுதியை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட அவைத் தலைவா் மூா்த்தி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் கிட்டுராஜா, நகரச் செயலா் எம்.கே.முருகன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ராசி சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலா் மதன், அண்ணா தொழிற்சங்கம் கந்தசாமிபாண்டியன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.