முகப்பு
திருநெல்வேலி

அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் திருவிழாவை, சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பானை வீதம் 5 பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டனர். இதை முன்னிட்டு கல்லூரி வளாகம் முழுவதும் செங்கரும்பு, மஞ்சள் குலைகளை தோரணமாக கட்டியிருந்தனர். மேலும், மாணவிகள் வண்ணகோலங்களை வரைந்து அனைவரையும் வரவேற்றனர்.

மாணவர்கள் வேட்டி கட்டியும், மாணவிகள் புடவை, தாவணி அணிந்தும் பொங்கல் விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பொங்கல் பானைகள் பொங்கி வழிந்த போது மாணவர்கள் வண்ணங்களை தெளித்தும், பட்டாசுகளை வெடித்தும் மகிழந்தனர். முதலில் பொங்கிய மூன்று பானைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →