முகப்பு
திருநெல்வேலி

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஆறுமுகமங்கலத்துக்கு சிறப்பு பஸ்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஸ்ரீவேம்படி சுடலைமாட சுவாமி திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக செவ்வாய்க்கிழமைதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

 தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஸ்ரீவேம்படி சுடலைமாட சுவாமி திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக செவ்வாய்க்கிழமைதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஸ்ரீவேம்படி சுடலைமாட சுவாமி திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பிரதி செவ்வாய்க்கிழமைதோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு பஸ்கள் செவ்வாய்க்கிழமைகளில் பகல் 12.30 மற்றும் 1.30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும், அதுபோல மாலை 6 மற்றும் 7 மணிக்கு ஆறுமுகமங்கலத்தில் இருந்து புறப்படும்.

இந்த சிறப்பு பஸ்களில் ஆறுமுகமங்கலம் சென்று வழிபாடு முடித்து மற்றும் திரும்பி வரவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

புறப்படும் இடத்திலேயே திரும்பி வரவும் கட்டணத் தொகையை சேர்த்து ரூ. 60 (ரூ. 30+ ரூ. 30) வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்தி பயன்பெறுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →