முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளி மீது தாக்குதல்

வாசுதேவநல்லூர் அருகே போதையில் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

 வாசுதேவநல்லூர் அருகே போதையில் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

வாசுதேவநல்லூர் அருகேயுள்ள அருளாச்சி, கன்னிமாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கனிராஜா மகன் மகாராஜன் (28). தொழிலாளி. அதே ஊர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லத்துரைபாண்டியன் மகன் காத்தப்பசாமி. வெள்ளிக்கிழமை, மகாராஜன் கன்னிமாரம்மன் கோவிலுக்குச் சென்றாராம். அப்போது அந்தப் பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்ட காத்தப்பசாமியை தட்டிக் கேட்டாராம்.

இதில், ஆத்திரமடைந்த காத்தப்பசாமி, இரும்புக் கம்பியால் மகாராஜனைத் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவர், சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து, காத்தப்பசாமியைத் தேடி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →