முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அம்மா மருந்தகத்தில் ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி சந்திப்பு கூட்டுறவு பேரங்காடியில் அம்மா மருந்தகம் இயங்கி வருகிறது. கடந்த 9.10.2014 முதல் செயல்பட்டு வரும் இந்த மருந்தகத்தில், பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தின் செயல்பாடுகளை ஆட்சியர் மு.கருணாகரன், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:09 AM
பகிர்:

திருநெல்வேலியில் உள்ள அம்மா மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி சந்திப்பு கூட்டுறவு பேரங்காடியில் அம்மா மருந்தகம் இயங்கி வருகிறது. கடந்த 9.10.2014 முதல் செயல்பட்டு வரும் இந்த மருந்தகத்தில், பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தின் செயல்பாடுகளை ஆட்சியர் மு.கருணாகரன், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

திருநெல்வேலி கூட்டுறவு பேரங்காடியில் இயங்கி வரும் அம்மா மருந்தகத்தில்ப் 15 ஆயிரம் வகையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மருந்துகளுக்கும் 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையை ரூ.1.50 லட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சைகளுக்கும் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளன. குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த மருந்தகத்தில் கணினி மூலம் ரசீது வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த மருந்தகத்தில் குறைந்த விலையில் மருந்துகளைப் பெற்று நோயின்றி வாழ வேண்டும் என்றார் ஆட்சியர். இந்த ஆய்வின்போது, பேரங்காடித் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மேலாண்மை இயக்குநர் அஜய்குமார், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.