திருநெல்வேலி

அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் முழு இடஒதுக்கீடு: எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் சங்கம் கோரிக்கை

DIN

பாளையங்கோட்டையில் ஆயுள் காப்பீடு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக் கருத்தரங்கில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் முழுமையாக இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
இக்கருத்தரங்குக்கு அமைப்பின் திருநெல்வேலி கோட்ட பொதுச்செயலர் வி. சுவாமிநாதன் தலைமை வகித்தார். அமைப்பின் தென்மண்டலத் தலைவர் டி. காளிதாஸ், தென்மண்டலச் செயலர்கள் எஸ். ராஜேந்திரன், ஏ. கிருஷ்ணமூர்த்தி, டி. மாஸ்டர்நேரு, அமைப்புச் செயலர் ஏ. பாண்டி, செயற்குழு உறுப்பினர் எஸ். குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கை, கோட்டத் தலைவர் ஜி. ராம்குமார் தொடங்கிவைத்தார். ஆயுள்காப்பீடு கழக திருநெல்வேலி கோட்ட முதுநிலை மேலாளர் கே. வசந்தகுமார், வணிக மேலாளர் இ.கே. வெங்கடகிருஷ்ணன், கோட்ட மேலாளர் ஜெயஸ்ரீஆனந்தன், விற்பனை மேலாளர் ஜி. குமார், கிளை மேலாளர்கள் ஏ. கிருஷ்ணவேணி, ஆர். சந்திரசேகரன், எஸ். விஜயன், பி. ராஜா, ஆர். சரவணமுருகேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
தீர்மானங்கள்: அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் முழுமையான இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு முறை அமல் செய்ய வேண்டும். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீட்டை 18 லிருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். அனைத்து துறைகளிலும் பின்னடைவு காலிப்பணியிடங்களை சிறப்புத் தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும். முதல்நிலை அதிகாரிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோட்டச் செயலர் (நிதி) டி. முருகன் வரவேற்றார். கோட்டச் செயலர் (தலைமையகம்) டி. சின்னராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT