திருநெல்வேலி

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

DIN

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 13ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த 1-9-2016 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாததைக் கண்டிப்பது. ஓய்வூதிய உயர்வு, ஓய்வூதிய கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை முறையாக வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாநில அமைப்புச் செயலர் ஏ. தர்மன் தலைமை வகித்தார். சிஐடியூ சார்பில் ஜி. வேலுச்சாமி, எஸ். பெருமாள், ஏஐடியூசி சார்பில் எஸ். காசிவிஸ்வநாதன், எல். குருசாமி, ஹெச்.எம்.எஸ். சார்பில் பி. சுப்பிரமணியன், எஸ். ஆறுமுகம், டிடிஎஸ்எப் சார்பில் வி. பிரம்மநாயகம், எல். முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தொமுச பொருளாளர் வி. முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT