திருநெல்வேலி

நெல்லை கோயில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

DIN

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, திருநெல்வேலியில் கெட்வெல் ஸ்ரீசஞ்சீவி வரத ஆஞ்சநேயர் கோயில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, கெட்வெல் ஸ்ரீசஞ்சீவி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆஞ்சநேயருக்கு திரவியங்கள், இளநீர், பால் உள்பட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி வடக்குப் புறவழிச்சாலையிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 1,008 பழங்கள், வடை மாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT