திருநெல்வேலி

களக்காட்டில் கடையில் திருட்டு: தம்பதி கைது

DIN

களக்காட்டில் வீட்டுப் பயன்பாட்டுக் பொருள்கள் விற்பனைக் கடையில் திருடியதாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
களக்காடு அருகேயுள்ள இடையன்குளத்தைச் சேர்ந்த தங்கசாமி மகன் ஜார்ஜ் (40). இவர் இங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் கவரிங் பொருள்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறார்.  கடந்த 23, 24ஆம் தேதிகளில் கடையிலிருந்த வாட்ச், கவரிங் சங்கிலி உள்பட ரூ. 3,500  மதிப்புள்ள பொருள்கள் திருடுபோயினவாம். இதுதொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டபோது, கடைக்கு வந்த தம்பதி இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் களக்காடு உதவி ஆய்வாளர் துரைசிங்கம் விசாரணை நடத்தினார். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த தம்பதி பாலசுப்பிரமணியன்(43) - கவிதா (35) எனத் தெரியவந்தது. இதையடுத்து,  அவர்களை போலீஸார் கைது செய்து, பொருள்களை மீட்டனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT