திருநெல்வேலி

நெல்லையில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயித்து ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். ரயில்வேத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ரயில் நிலையங்களுக்கு தனியார் மயமாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கும் நடவடிக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய எஸ்.சி மற்றும் எஸ்.டி. ரயில்வே ஊழியர் சங்கம் திருநெல்வேலி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலர் எம். மதியழகன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் பி. செல்லையா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை கோட்டச் செயலர் டி.எஸ். மணி தொடங்கிவைத்தார். நிர்வாகி முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT