திருநெல்வேலி

கொக்கிரகுளம் அருகே காமராஜர்புரத்தில் அடிப்படை வசதிகள் கோரி மக்கள் தர்னா

DIN

கொக்கிரகுளம் அருகேயுள்ள காமராஜர்புரத்தில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி மாநகராட்சி வளாகத்தில் பொதுமக்கள் புதன்கிழமை திடீர் தர்னாவில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 31 ஆவது வார்டில் கொக்கிரகுளம் அருகே காமராஜபுரம் உள்ளது. இப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் தயாசங்கர் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து மாநகராட்சி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அளித்த மனு:
எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர்த் தொட்டிக் கட்டப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது. 8 கழிப்பறைகள் கொண்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமலேயே சேதமடைந்து கிடக்கிறது. ஆழ்துளை கிணறு பழுது நீக்கப்படாமல் உள்ளது. அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லாமல் உள்ளது. ஆகவே, காமராஜர்புரம் பகுதிக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT