திருநெல்வேலி

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் நூதனப் போராட்டம்

DIN

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரவையின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலர் கு.கி.கலைக்கண்ணன் தலைமையில், அந்த அமைப்பினர் கொள்ளிப் பானையில் மனுவுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி முழக்கமிட்ட அவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:
திருநெல்வேலி மாநகரில் மகாராஜநகர் உழவர்சந்தை அருகேயும், பேட்டையில் மக்கள் குடியிருப்பு அதிகம் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியிலும், நகரத்தில் மாடத்தெரு பகுதியிலும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவற்றை இடமாற்றம் செய்யக் கோரி ஏற்கெனவே மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. பெண்கள், முதியவர்களை பாதிக்கும் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT