முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் இலக்கியக் கூட்டம்

நிலா இலக்கிய வட்டம் சார்பில் 65-ஆவது நிலா முற்ற இலக்கியக் கூட்டம் பாளையங்கோட்டையை அடுத்த பெருமாள்புரத்தில் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

நிலா இலக்கிய வட்டம் சார்பில் 65-ஆவது நிலா முற்ற இலக்கியக் கூட்டம் பாளையங்கோட்டையை அடுத்த பெருமாள்புரத்தில் நடைபெற்றது.
நிலா இலக்கிய வட்டத் தலைவரும்  பேராசிரியருமான பா. வளன் அரசு தலைமை வகித்தார். புருஷோத்தமன் இறைவணக்கம் பாடினார். இலக்கிய வட்டப் பொறுப்பாளர் ந. ராசகோபால் வரவேற்றார்.
"தத்துவஞானி வேதாத்திரி மகான்' என்ற தலைப்பில் புலவர் இராம. ராசாராம் சுடலைமுத்து சிறப்புரையாற்றினார். சிவ.சத்தியமூர்த்தி, பு.சி. கணேசன், வீ. பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இலக்கிய வட்ட பொருளாளர் இரா.முருகன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →