திருநெல்வேலி

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

DIN

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரியில் தேசிய அளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு முதல்வர் வி. இளங்கோவன் தலைமை வகித்தார். பொதுமேலாளர் எஸ். இக்னேஷியஸ்சேவியர் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில், சிவில் மற்றும் குற்றவியல் பொதுநல வழக்குரைஞர் மேகலா பேசியது: பெண்கள் தங்களது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் போது, சட்ட ரீதியான பாதுகாப்பு அவசியமாகிறது. ஆகவே, பெண்கள் பாதுகாப்பு குறித்து அறிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
ஸ்காட் கல்வி குழும செயல் இயக்குநர் மெனான்டஸ், பொதுமேலாளர் க. ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து முதலாண்டு மாணவிகள் கலந்துகொண்டனர். பெண்கள் முன்னேற்றக்குழு ஒருங்கிணைப்பாளர் கோமதி வரவேற்றார். மாணவி முத்துசெல்வி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT