திருநெல்வேலி

பார்வையற்ற மாணவர்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டி

DIN

பார்வையற்ற மாணவர்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டிகள் திருநெல்வேலியில் சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஆனிஜேன் ஆஸ்க்வித் நினைவு கோப்பைக்கான பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டிகள் பாளையங்கோட்டையிலுள்ள ஆஸ்க்வித் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் 2 நாள்கள் நடைபெறுகிறது. லீக் முறையில் நடைபெறும் இப்போட்டியில் திருநெல்வேலி, வேலூர், கரூர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பார்வையற்ற பள்ளி மாணவர்கள் பங்கேற்ற 4 அணிகள் பங்கேற்றன.
சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டியை பள்ளியின் முதல்வர் கிங்ஸ்டன்ஜேம்ஸ்பால் தொடங்கி வைத்தார்.
முதல் நாள் ஆட்டத்தில் கரூர், வேலூர் அணிகள் விளையாடின. இதில், கரூர் அணியினர் 147 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றனர். 2 ஆவது ஆட்டத்தில் திருப்பூர், திருநெல்வேலி அணிகளும் விளையாடின. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மாலையில் நடைபெறும் விழாவில் கோப்பை வழங்கப்படுகிறது.
போட்டியின் நடுவர்களாக ஜோயல், ரமேஷ், ஆறுமுகச்சாமி, வசந்த், செல்வபாண்டி ஆகியோர் செயல்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

SCROLL FOR NEXT