திருநெல்வேலி

நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

DIN

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து திருநெல்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வரும் தமிழக அரசை கண்டித்தும்,
உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் வளர்ச்சிப் பணிகள் முடங்கி  உள்ளன.  ஆகவே, உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் கரிசல் மு.சுரேஷ் தலைமை வகித்தார்.   தெற்கு மாவட்டச் செயலர் ஜி. சுந்தர்,  மேற்கு மாவட்ட அமைப்பாளர் டேனியல் அருள்சிங்,  வடக்கு மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மண்டலச் செயலர் ஐகோர்ட் சேனா,  முன்னாள் மாவட்டச் செயலர் அமுதா மதியழகன்,  நிர்வாகிகள் நடராஜன்,  ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT