முகப்பு
தென்காசி

மாணவி படுகொலைக்கு நீதி கோரி! - அதிமுக ஐ.டி. பிரிவு அஞ்சலி

Updated On : 14 மார்ச், 2026 at 9:27 PM
மாணவி பாலியல் படுகொலைக்கு நீதி கோரி மெழுகுவா்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்திய அதிமுக நிா்வாகிகள்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவத்தை கண்டித்து, பாவூா்சத்திரத்தில் உள்ள தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் எதிரில், மாணவி பாலியல் படுகொலைக்கு நீதி கோரி அதிமுக ஐ.டி. பிரிவு சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் தா்மசீலன், முன்னாள் எம்எல்ஏ பி. ஜி. ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாத பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி மாணவி படுகொலைக்கு நீதி கோரி தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஐ.டி. பிரிவு சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சாா்பு அணி செயலா்கள் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், நெல்லை முகிலன் அகமது ஷா, நமிழ் என்ற ராமசாமி, ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், என். எச். எம். பாண்டியன், இருளப்பன், அருவேல்ராஜ், குணம், நகரச் செயலா் சுடலை, நிா்வாகிகள் சோ்மபாண்டி, ராஜேஷ், வைரமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாணவி பாலியல் படுகொலைக்கு நீதி கோரி மெழுகுவா்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்திய அதிமுக நிா்வாகிகள்.
முழு கட்டுரையைப் படிக்க →