முகப்பு
திருநெல்வேலி

பேரூராட்சி ஊழியரை தாக்கியதாக இளைஞர் கைது

திருநெல்வேலி மாவட்டம்,  நாராயணம்மாள்புரம் பேரூராட்சிப் பணியாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம்,  நாராயணம்மாள்புரம் பேரூராட்சிப் பணியாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் அன்பழகன் (55).  இவர்,  திருநெல்வேலி அருகே நாராயணம்மாள்புரம் பேரூராட்சியில் வரி வசூலராகப் பணி செய்து வருகிறார். குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புக்குட்டி மகன் கொம்பையா (27).  இவர் பேரூராட்சியில் அரசு நலத்திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடு கட்டி தருமாறு கேட்டு விண்ணப்பம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இத்திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் கொம்பையாவை சேர்க்கவில்லை என கூறப்படுகிறது. அன்பழகன் குறுக்கீடு காரணமாகவே, தன்னை அத்திட்டத்தில் சேர்க்கவில்லை என புகார் தெரிவித்த கொம்பையா,  வரி வசூலர் அன்பழகனை தாக்கினாராம். இது குறித்த புகாரின்பேரில் தச்சநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து கொம்பையாவை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →