திருநெல்வேலி

மண்டல விநாடி-வினா போட்டி: நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் முதலிடம்

DIN

திருநெல்வேலி  பேட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான விநாடி-வினா போட்டியில் நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் 2018 ஆம் ஆண்டுக்கான மாநில விநாடி-வினா போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி மண்டல அளவிலான போட்டிகள் 8 இடங்களில் நடத்தப்படுகிறது. திருநெல்வேலி,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்-மாணவிகளுக்கான போட்டி பேட்டை மதிதா இந்துக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலர் (பொ) சிதம்பரம் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதியரசு,  கதிர்வீச்சு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
மூன்று மாவட்டத்துக்குள்பட்ட 21 கல்லூரிகளைச் சேர்ந்த 156 மாணவர்- மாணவிகள் பங்கேற்றனர்.
நாகர்கோவில் மலங்கரா கத்தோலிக்க கல்லூரி மாணவர்கள் முதலிடத்தையும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடத்தையும்,  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர்களுக்கு பின்னடைவு

ஜூன் 9-ல் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கும் சந்திரபாபு நாயுடு!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

ஆந்திர பேரவைத் தேர்தல்: ரோஜாவுக்கு பின்னடைவு

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

SCROLL FOR NEXT