முகப்பு
திருநெல்வேலி

கந்தசஷ்டி: இலஞ்சி, ஆய்க்குடி கோயில்களில் கொடியேற்றம்

இலஞ்சி மற்றும் ஆய்க்குடி முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

இலஞ்சி மற்றும் ஆய்க்குடி முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோயிலில் அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.இரவில் அபிஷேகம் மற்றும் பூங்கோயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
விழா நாள்களில் நாள்தோறும் அபிஷேகம், தீபாராதனை சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் 6ஆம் நாளான 25ஆம்தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
ஆய்க்குடி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி பெருந்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கஜவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இரவில் சுவாமி வெள்ளிமயில் வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெற்றது.
விழா நாள்களில் தினம்தோறும் அபிஷேகம், தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவு, பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் 6ஆம் நாளன்று சுவாமி சூரசம்ஹாரத்திற்கு வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


வென்னிமலை முருகன் கோயிலில்...
பாவூர்சத்திரம் காமராஜர்நகர் வென்னிமலை ஸ்ரீமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முன்னதாகஅதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.  6 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.  25ஆம் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அபிஷேகம், உச்சிக்கால பூஜையும், மாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது.
25ஆம்தேதி காலை 10 மணிக்கு சஷ்டி ஹோமமும், மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 26ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மன் தவசு மண்டபம் செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு காட்சி அருளல், இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →