முகப்பு
திருநெல்வேலி

குருவாயூர், கோவை ரயில்கள் தாமதம்

குருவாயூர் விரைவு ரயில், கோவை பயணிகள் ரயில்கள் திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை தாமதமாக வந்தன.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 7:14 AM
பகிர்:

குருவாயூர் விரைவு ரயில், கோவை பயணிகள் ரயில்கள் திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை தாமதமாக வந்தன.
குருவாயூரில் இருந்து சென்னைக்கு தினமும் பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காலை 7.35 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு நிலையத்துக்கு வந்தடையும். ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால், சென்னை போன்ற தொலைதூரங்களுக்கு பயணம் செய்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல், தினமும் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.