முகப்பு
திருநெல்வேலி

தமிழ்ப் புலிகள் கட்சியினர் ரயில் மறியல்

பாவூர்சத்திரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 7:09 AM
பகிர்:

பாவூர்சத்திரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய  மத்திய  அரசை  கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக் கோரியும் மேற்கு மாவட்ட தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில்,  பாவூர்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் குற்றாலம் குமார் தலைமையில் பங்கேற்ற ஆலங்குளம் தொகுதிச் செயலர் தமிழ்குமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலர் இளஞ்சூரியன்,  கீழப்பாவூர் ஒன்றியச் செயலர் செல்வராஜ்,  செய்தி தொடர்பாளர் தமிழ்குமரன் உள்ளிட்ட 24 பேரை பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) குமரேசன்,  உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.