திருக்குறுங்குடி நம்பி கோயிலில் இன்று தேரோட்டம்
திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.9) நடைபெறுகிறது.
திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.9) நடைபெறுகிறது.
வைணவத் தலங்கள் 108 இல் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, அழகியநம்பிராயர் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது. 6ஆம் திருநாளான வியாழக்கிழமை அதிகாலை மேலரத வீதியில் தேவகந்தர்வ மகரிஷிகளுக்கு ஐந்து நிலைகளிலான நம்பி சுவாமி திருக்காட்சி அருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.9) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தேரோட்டத்தை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கிவைக்கிறார். தேரோட்டத்தையொட்டி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.