வைகோவுக்கு கருப்புக் கொடி: 2 பெண்கள் உள்பட 54 பேர் கைது
கோவில்பட்டியில், வைகோவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாக பாஜக நிர்வாகிகள் 2 பெண்கள் உள்பட 54 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டியில், வைகோவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாக பாஜக நிர்வாகிகள் 2 பெண்கள் உள்பட 54 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கோவில்பட்டி பயணியர் விடுதி முன் வாகனப் பிரசாரத்தை வைகோ செவ்வாய்க்கிழமை தொடங்கினார். இந்நிலையில், பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக வைகோவைக் கண்டித்தும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகக் கண்டித்தும் பாஜக மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமையில் இரு பெண்கள் உள்பட 54 பேர் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் கட்சிக் கொடி மற்றும் கருப்புக் கொடியை ஏந்தியபடி வைகோவை எதிர்த்து கோஷமிட்டனர்.
பின்னர், அண்ணா பேருந்து நிலைய வளாகத்திலிருந்து பயணியர் விடுதி நோக்கி வர முயன்றனர். அப்போது, டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, கருப்புக் கொடி காட்ட முயன்றதாக 54 பேரையும் கைது செய்தனர்.