முகப்பு
திருநெல்வேலி

லாரி உரசியதால் பேருந்து பயணியின் கை துண்டானது

வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி உரசியதால் பேருந்து பயணியின் கை துண்டானது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி உரசியதால் பேருந்து பயணியின் கை துண்டானது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் ஆனந்த் (25). தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது நிறுவனத்தின் அலுவலகம் கோவை சுங்கம் பகுதியில் உள்ளது. ஆனந்த் வேலை நிமித்தமாக திருச்சி சென்றுவிட்டு, கோவைக்கு அரசுப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். வெள்ளக்கோவில் குருக்கத்தி அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி பேருந்தை உரசியவாறு சென்றது. இதில் ஜன்னல் ஓரம் அமர்ந்து முழங்கையை வெளியே நீட்டிக் கொண்டிருந்த ஆனந்தின் கை துண்டாகி சாலையில் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் சக பயணிகள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அவரை  ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →