தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்க பிப். 28 கடைசி
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் தொழில் நல்லுறவு விருதுக்கு பிப். 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் தொழில் நல்லுறவு விருதுக்கு பிப். 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பு. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலையளிப்பவர் மற்றும் தொழிலாளர் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவும் நிலவுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்ல தொழில் உறவைப் பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2015-16 ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக் குழு தேர்ந்தெடுக்கும்.
இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களைத் தொழிலாளர் துறையின் HTTP://WWW.LABOUR.TN.GOV.IN/LABOUR என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் அலுவலகம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டாரத் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிலும் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு இம்மாதம் 28ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.